அமெரிக்க நாட்டில் சில நாட்களாக பனிப்புயல், வெள்ளம் பாதிப்புகளால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் குளிர்காலம் நிலவுவதால், பனிப்புயலில் தாக்கமும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் சாலினாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால்,அப்பகுதியில் வசிக்கும் 24 ஆயிரம் மக்களை வேறுபகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
2 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மகள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிலையில், மேலும், 2 புயல்கள் கலிபோர்னியாவில் உள்ள பசிபிக் வடமேற்குப் பகுதியைத் தாக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.