Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியாவில் மர்ம காய்ச்சல்: 21 பேர் பலி!

Webdunia
சனி, 14 மே 2022 (13:00 IST)
வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 21 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல். 

 
வட கொரியா நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மர்மமாக இருக்கும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது. 
 
சமீபத்தில் வடகொரியாவில் முதல் முதலாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் என்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் கிம், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார். இந்த நிலையில் முதல் முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் பலியாகி உள்ளதாக வெளிவந்த தகவலால் வடகொரியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அந்நாட்டில் ஏப்ரல் இறுதி வரையில், மர்ம காய்ச்சல் நாடு முழுவதும் பரவியுள்ளது என வடகொரியா தெரிவித்து உள்ளது.  இதற்கு 3,50,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 21 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments