மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாயமான விமானம் தெற்கு சீன கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் விமானத்தில் பயணித்த 239 பேரும் பலியாகியிருக்கலாமென அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.