Webdunia - Bharat's app for daily news and videos

Install App

250 ஆண்டுகள் பழமையான காபி பார் மூடப்படுகிறதா? அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (21:41 IST)
இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற காபி பார் ஒன்று கடந்த 1760ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் நிலையில் வாடகை பிரச்சனையால் அந்த கடை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
 
இத்தாலியில் உள்ள ரோம் நகரில் கடந்த 1760ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த காபி பாரின் வாடிக்கையாளர்களில், பிரிட்டன் எழுத்தாளர் சார்லஸ் டிக்கின்ஸ், கவிஞர் ஜான் கீட்ஸ், ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஆட்ரி ஹெப்பர்ன், எலிசபெத் டெய்லர் மற்றும் இளவரசி டயானா ஆகியோர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தாலிக்கு வரும் அரசியல் தலைவர்கள் இந்த காபி பாரில் காபி குடிக்காமல் சென்றதில்லை
 
இந்த நிலையில் இந்த கட்டிடத்தின் வாடகை படிப்படியாக உயர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு வரை 14 லட்ச ரூபாயாக இருந்தது. ஆனால் திடீரென 2017ஆம் ஆண்டு கட்டிட உரிமையாளர் ரூ.94 லட்சம் என வாடகையை உயர்த்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த காபி பாரின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றமும் கட்டிடத்தை காலி செய்யும்படி காபி பார் உரிமையாளருக்கு உத்தரவிட்டது. 
 
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி காபி பார் உரிமையாளர் தொடுத்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், காலி செய்யும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதால் தற்காலிகமாக இந்த காபி பார் தப்பினாலும் எந்த நேரத்திலும் மூடப்படலாம் என கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments