பாகிஸ்தானில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மாநிலம் கராச்சியை சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் இவரது வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு பின்னர் அது வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் பாகிஸ்தான் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஒரு ஆண்டில் 300 ரூபாய் சேமிப்பதே சவாலாக இருக்கும் தன் அக்கவுண்டில் எப்படி எவ்வளவு பணம் வந்ததென்று தெரியாது என கூறியுள்ளார்.
இறுதியில் யாரோ சில மோசடி கும்பல் தான் இந்த வேலையை செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பாவி பொதுமக்களின் வங்கிக்கணக்கில் சில மோசடி கும்பல் இப்படி செய்வது வாடிக்கையாகி வருகிறது எனவும் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.