Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

33 மீனவர்கள் விடுதலை..! 3 மீனவர்களுக்கு சிறை..! உறவினர்கள் கொந்தளிப்பு..!!

fisherman boat

Senthil Velan

, புதன், 27 மார்ச் 2024 (15:02 IST)
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், நாகையைச் சேர்ந்த 36 மீனவர்களில் 33 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது.  மேலும் மூன்று மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது.
 
காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 15 மற்றும் 17ம் தேதி ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்துள்ளனர்.
 
அப்போது 3 படகுகள் மற்றும் 33 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட 36 மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் மீண்டும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 33 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

படகோட்டி இருவருக்கு 6 மாத சிறை தண்டனையும், 2வது முறையாக மீன்பிடித்த குற்றத்திற்கு மீனவர் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்துள்ளனர். இந்த சம்பவம் காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 கிலோ கஞ்சா கடத்திய பெண் பத்திரிகையாளர்.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது..!