Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கொரோனாவால் 5 கோடி பேர் வேலையிழப்பு : அமெரிக்க அதிபருக்கு கோரிக்கை !!

கொரோனாவால் 5 கோடி பேர் வேலையிழப்பு : அமெரிக்க அதிபருக்கு கோரிக்கை !!
, புதன், 1 ஏப்ரல் 2020 (17:34 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில்,  அமெரிக்காவில் 5 கோடிக்கு அதிகமானோர் வேலையிழந்துள்ளனர். அதனால் வெளிநாடில் இருந்து வேலைக்கு எடுப்பதற்கான விசா வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என அந்நாட்டில் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரொனாவால் அமெரிக்காவில்  1 லட்சத்து 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளானர். அதில், 4ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் போன்று கொரோனாவை தடுக்க அமெரிக்க அதிபர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், கொரொனா பாதிப்பால் சுமார் 5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். சுமார் 33 லட்சம் பேர் உதவித்தொகை கேட்டுவிண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில்,அங்கு ஏராளமானோர் வேலை யிழந்துள்ள நிலையில்,  வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வருபவர்களை பணி அமர்த்துவதற்கான எச் 1 பி விசாக்கள் வழங்குவதை நிறுத்தக் கோரி யுஎஸ் டெக் ஒர்க்கர்ஸ் என்ற அமைப்பு அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன மார்க்கெட்டில் அறிமுகமான விவோ S6: விவரம் உள்ளே!!