சீனாவில் 5 மாடி கட்டிடம் ஒன்று அதிநவீன இயந்திரங்களின் மூலம் அலேக்காக தூக்கி சுமார் 24 மீட்டர் தொலையில் நிறுவப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனா நாட்டில் சாண்டோங் மாகாணம் ஜினான் தனியார் நிறுவனம் இயங்கிவரும் பகுதி வழியாக ஒரு முக்கிய சாலை அமைக்க வேண்டுமென அரசு திட்டமிட்டது.
இந்நிலையில், ஒரு மிகபெரிய கட்டும் ஒரு நிறுவனம் ஜினான் நிறுவனம் இயங்கி வந்த 8 ஆயிரம் டன் கொண்ட கட்டிடத்தை அப்படியே பெயர்த்து அங்கிருந்து 24 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் நிறுத்தியது.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இக்கட்டம் நகர்த்தப்பட்ட போது ஊழியர்கள் வழக்கம் போல் அலுவலத்தில் பணி செய்து கொண்டிருந்தனர் என்பதுதான்.