சீனாவில் புறப்பட இருந்த விமானத்தின் எஞ்சினில் நபர் ஒருவர் காசுகளை அள்ளி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள அன்கின் தியான்சூஷன் விமான நிலையத்திலிருந்து “லக்கி ஏர்” விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அதில் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்த லூ சாவோ என்பவர் முதன்முறையாக பயணம் செய்திருக்கிறார்.
விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் லூவோ திடீரென கை நிறைய சீன நாணயங்களை அள்ளி எஞ்சினில் கொட்டினார். இதை கண்டு பதறிய அதிகாரிகள் உடனே விமானத்தை நிறுத்தினர். பயணிகளை பத்திரமாக வெளியேற்றிவிட்டு விமானத்தை சோதித்ததில் எஞ்சின் சேதாரம் அடைந்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து லூவோவிடம் விசாரித்த போது தான் முதன்முதலாக விமானத்தில் பயணிப்பதால் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என கடவுளை வேண்டி காசு போட்டதாக சொல்லியுள்ளார். லூவோவுக்கு 17 ஆயிரத்து 200 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லீவோ காசை எஞ்சினில் கொட்டியதை அதிகாரிகள் பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.