கொரோனா வேகமாகப் பரவி வருவதால் மத்திய பிரதேசத்தில் 60 மணிநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அந்த மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது, என்பதும் இந்த அறிவுறுத்தலை கணக்கில் கொண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து 60 மணிநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இன்று மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.