Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இதுக்கு மட்டுமே ரூ. 59 கோடிக்கு செலவா? ராணி இறுதிச்சடங்கு எப்படி நடக்கும்?

இதுக்கு மட்டுமே ரூ. 59 கோடிக்கு செலவா? ராணி இறுதிச்சடங்கு எப்படி நடக்கும்?
, சனி, 17 செப்டம்பர் 2022 (08:43 IST)
வரும் 19-ம் தேதி அன்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்து மகாராணியான இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8ம் தேதியன்று உயிரிழந்தார். அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு கடந்த 11ம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அரச குடும்பத்தினர் மரியாதை செலுத்திய பின் செயிண்ட் கில்ஸ் தேவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு விமானம் மூலமாக சவப்பெட்டி கொண்டு வரப்பட்டு வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 19-ம் தேதி அன்று ராணியின் உடல் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு வருகை தரவுள்ளனர்.

இதனால் பாதுகாப்பிற்கு மட்டும் சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க லாடருக்கும் (இந்திய மதிப்பில் ரூ. 59 கோடி) அதிகமாக செலவாகும் என தெரிகிறது. சுமார் 7.5 லட்சம் பேர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என  தகவல்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜான்சன் பேபி பவுடரின் உற்பத்தி உரிமம் ரத்து: மகாராஷ்டிரா அரசு அதிரடி!