சீனாவில் நாளுக்குநாள் கொரனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து அங்கு தற்போது பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் சீனாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியதால் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் சீனாவில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது
உலகெங்கிலுமிருந்து வந்த 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தற்போது சீனாவில் சிக்கியிருப்பதாகவும் அவர்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது
இது குறித்து சீன அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.