கிட்னியை விற்று ஐபோன் வாங்கிய சிறுவன் தற்பொழுது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபோன் என்றால் எல்லோருக்கும் இஷ்டம். ஏனென்றால் அந்த பிராண்ட் அப்படி. ஆனால் அதனை எளிதில் யாராலும் வாங்கிவிட முடியாது. ஏனென்றால் அதன் விலை அப்படி.
இந்நிலையில் சீனாவை சேர்ந்த வாங் என்ற சிறுவன் ஐபோன் 4ஐ வாங்க ஆசைப்பட்டிருக்கிறான். ஆனால் போன் வாங்க அவனிடம் பணமில்லை. இருந்தபோதிலும் போனை வாங்கியே ஆக வேண்டும் என துடித்த சிறுவன், முட்டாள் தனமாய் தனது ஒரு கிட்னியை 3200 டாலருக்கு விற்று போனை வாங்கியுள்ளான்.
ஆனால் ஆபரேஷன் முறையாக செய்யப்படாததால், அவனுக்கு மற்றொரு கிட்னியும் பாதிப்பு ஏற்பட்டது. தற்பொழுது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். எதற்கு இந்த தேவையில்லாத வேலை. ஐபோன் மோகத்தால் தங்களது மகன் உயிருக்கு போராடுவதை சிறுவனின் பெற்றோர்களால் ஜீரணிக்கமுடியாமலும், அவனுக்கு சிகிச்சை அளிக்க போதிய பணவசதி இல்லாமலும் தவித்து வருகின்றனர்.