அமெரிக்காவை சேர்ந்த காமெடி நடிகர் ஜான் மெலெண்டஸ் அதிபர் டிரம்பை போன் போட்டு கலாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜான் மெலெண்டெஸ் என்ற பிரபல காமெடி நடிகர், கடந்த வாரம் வெள்ளை மாளிகைக்கு போன் செய்து தான் ஜனநாயக கட்சியை சேர்ந்த நியூ ஜெர்சி மாகாண செனட்டர் பாப் மெலெண்டெஸ் பேசுவதாகவும், டிரம்பிடம் பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய அதிபர் டிரம்ப் மருமகன் ஜரேட் குஷ்னர் விரைவில் உங்களுக்கு அழைப்பு வரும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
சில மணிநேரத்தில் ஜானுக்கு போன் செய்த டிரம்ப் செனட்டர் பாப் மெலெண்டெஸிடம் பேசுவதாக நினைத்து ஜான் மெலெண்டெஸிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து டிரம்ப் மிக தீவிரமாக பேசியுள்ளார்.
இந்த ஆடியோவை ஜான் இணையத்தில் வெளியிட இது வைரலாக பரவியது. ஜான் டிரம்பை போன் போட்டு இப்படி ப்ராங்க் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிபரை ஏமாற்றியதற்காக ஜான் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் ‘நான் இன்னும் கைது செய்யப்படவில்லை’ என ஜான் மெலெண்டெஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.