கிக்கி சேலஞ்சை செய்ய முயன்ற பெண் காரிலிருந்து தவறி விழுந்ததில் கவலைக்கிடமாக உள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் கிக்கி சேலஞ்ச் என்ற டிரெண்ட் பரவி வருகிறது. காரில் சென்று கொண்டிருக்கும் ஒருவர் திடீரென ஓடும் காரில் இருந்து இறங்கி நடுரோட்டில் டான்ஸ் ஆடி, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் இந்த சேலஞ்ச்
கனடாவை சேர்ந்த பாப் பாடகர் ஒருஅர் ஆரம்பித்து வைத்த இந்த சேலஞ்ச் தற்போது உலகம் பரவியுள்ளதால் பலர் நடுரோட்டில் திடீரென ஓடும் காரில் இருந்து இறங்கி காரின் உடன் சென்று கொண்டே நடனமாடுகின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் லோவா நகரத்தில் வசித்து வரும் அன்னா ஓர்டன் (18) என்ற இளம்பெண் இந்த கிக்கி சேலஞ்சை முயற்சி செய்துள்ளார்.
அப்போது காரிலிருந்து கீழே இறங்க முயற்சித்த அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
அன்னா கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை பார்த்தாவது இனி மக்கள் இவ்வாறு கிறுக்குத்தனமாக செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.