அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது எலக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் போட முயற்சித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மனிதர்கள் சிலர் சில சமயங்களில் அதிமேதாவித் தனமாக நடந்து கொள்வதாக நினைத்துக்கொண்டு செய்யும் செயல் செம காமெடியாய் போய் முடியும். இதனை பார்க்க சகிக்காது. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் எரிபொருளை மிச்சப்படுத்தவும், மாசில்லா நகரத்தை உருவாக்கவும் மக்கள் பலர் பெட்ரோல் மற்றும் டீசல் காருக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் எலக்ட்ரிக் காரில் சென்றுள்ளார். அப்போது என்ன நினைத்தாரோ என்னவோ பெட்ரோல் பங்கில் தன்னுடைய காரை நிறுத்தி காருக்கு பெட்ரோல் போட முயற்சித்துள்ளார். பெட்ரோல் டேங்க் இல்லாததால் காரை சுற்றி வந்து பார்த்துள்ளார். இதனை பின்னால் இருந்தவர் வீடியோவாக எடுத்தார்.
பின்னர் அந்த நபர் காரிலிருந்து இறங்கி வந்து, அந்த பெண்ணிடம் இது எலக்ட்ரிக் கார் என விளக்கியுள்ளார். பின்னர் அந்த பெண் அசடு வளிந்தவாறு அங்கிருந்து சென்றுள்ளார்.