டேட்டிங் செல்வது தான் எனது ஃபுல் டைம் வேலை என இளம்பெண் ஒருவர் கூறியுள்ளார்.
இன்றைய இளம்தலைமுறையினர் ஒருவருக்கொருவர் நட்புடன் பழக செல்போனில் ஏகப்பட்ட செயலிகள் வந்துவிட்டன. இந்த ஆப் மூலம் பெண்கள், ஆண்கள் தங்களுக்கு பிடித்தவருடன் பேசி பழக முடியும். செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு இவர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை.
அமெரிக்காவை சேர்ந்த சபரினா பெரீஸ் என்ற இளம்பெண் குறிப்பிட்ட டேட்டிங் ஆப் மூலம் பல ஆண்களுடன் டேட்டிங் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து அவர் பேசுகையில் எனது தோழி மூலம் எனக்கு இந்த டேட்டிங் ஆப் குறித்து தெரிய வந்தது. குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறிய எனக்கு இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. டேட்டிங் ஆப் என்பது ஒரு தவறானது எனவும் டேட்டிங் செல்லும் பெண்கள் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் போன்றவர்கள் என பலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. எப்பொழுதும் என் பாதுகாப்பை கவனத்தில் கொள்வேன்.
பலதரப்பட்ட ஆண்களை சந்திப்பதால் தமக்கு அனுபவம் கிடைப்பதாகவும் இதன் மூலம் ஒரு வருடத்தில் 8000 டாலர்கள் வரை சம்பாதிப்பதாகவும் அந்த பெண் கூறினார்.