ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றிய தாலிபான்: போர் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக அந்நாட்டு அரசுக்கும் தாலிபான் அமைப்புக்கும் இடையே நடந்த வந்த போர் தற்போது முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதிபர் மாளிகை உள்பட அனைத்தும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் ஆப்கன் அதிபர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் காபூலில் உள்ள 60 லட்சம் மக்கள் நலன் கருதி தான் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆப்கன் அதிபர் அஷ்ரவ் கானி தற்போது எங்கு இருக்கின்றார் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும், அவர் தஜகிஸ்தான் நாட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ஆப்கன் அதிபர் மாளிகை உள்பட அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிய தாலிபான்கள் போர் முடிவுக்கு வந்து விட்டதாகவும் விரைவில் தலிபான்கள் ஆட்சி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது