சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடந்த 1983ம் ஆண்டு வரை விமான சேவை இயங்கி வந்த நிலையில் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தவுடன் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து 36 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்தபோது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உள்பட பலர் மாண்டனர். இதனை அடுத்து இந்த யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் நிறுத்தப்பட்ட பல விமான சேவைகளை மீண்டும் தொடங்க இந்தியா மற்றும் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வந்தது
இதனை அடுத்து கடந்த ஜூலை மாதம் இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் புதிய விமான சேவைகளை தொடங்குவது குறித்து ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் மீண்டும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கும் ஆலோசனையும் செய்யப்பட்டது இதனை அடுத்து
இதனையடுத்து இன்று முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து மட்டுமின்றி மதுரை, திருச்சி, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்தும் யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் செல்ல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இயங்கியது அப்பகுதி மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது