பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற நிலையில் அங்கு அவர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதோடு அதிபர் புதினுடன் முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அவர் இன்று ஆஸ்திரியா நாட்டிற்கு சென்று உள்ளார் என்றும் அந்த நாட்டில் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, மாஸ்கோவிலிருந்து ஆஸ்திரியாவிற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்று உள்ளார். அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மர் ஆகிய இருவரும் பிரதமர் மோடியை வரவேற்றனர் என்றும் மூவரும் முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்தியா ஆஸ்திரியா இடையே நட்புறவை மேலும் வலுப்படுத்துவது உட்பட பல பேச்சு வார்த்தைகள் இன்று நடைபெறும் என்றும் ஒரு சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.