அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி சமீபத்தில் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வங்கி உலகின் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவியாக இருந்தது என்றும் இந்த வங்கி திவாலானதால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிலிகான் வேலி வங்கியில் டெபாசிட் செய்திருந்த தொகை முழுவதற்கும் அமெரிக்க அரசு பொறுப்பேற்றுள்ளதாகவும் விரைவில் டெபாசிட் தாரர்களுக்கு பணம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சிலிக்கான் வேலி வங்கியை அடுத்து சிக்னேச்சர் என்ற வங்கியும் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்க மக்கள் மத்தியில் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அமெரிக்காவில் அடுத்தடுத்து இரண்டு வங்கிகள் திவால் ஆனதால் அந்நாட்டு பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.