அமெரிக்காவில் வரும் 19 ஆம் தேதி முதல் இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 கோடியாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தம் 65,904,256 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 871,215 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதிலும் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இலவச கொரோனா பரிசோதனை செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
ஆம், அமெரிக்காவில் வரும் 19 ஆம் தேதி முதல் இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதற்காக COVIDTests.gov என்ற வலைதளம் தொடங்கப்படும். இதில் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டு ஆர்டரை பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு முகவரிக்கு 4 பரிசோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 7 முதல் 12 நாட்களுக்குள் தபால் சேவை மூலம் பரிசோதனை முடிவுகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.