Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவது நிறுத்திவைப்பு: ஆணையில் கையெழுத்திடும் டிரம்ப்

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (08:06 IST)
உலகிலேயே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்து வரும் நிலையில் அந்நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருவது மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரமும் சீரழிந்து வருகிறது 
 
இந்த நிலையில் அமெரிக்க மக்களைக் காக்கவும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர்திருத்தம் செய்யவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சில அதிரடி முடிவுகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி கண்ணுக்கு தெரியாத வைரஸ் தாக்குதல் மற்றும் அமெரிக்க குடிமக்களின் வேலை பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் பிற நாட்டினர் புதிதாக குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஒரு ஆணையில் அதிபர் டிரம்ப் விரைவில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.
 
அமெரிக்காவில் இந்தியர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் பணி செய்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக யாரும் இனிமேல் அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு குடியேற முடியாத நிலை இந்த ஆணையால் ஏற்படும். ஏற்கனவே இந்தியா உள்பட வெளிநாட்டவர்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்த நிலையில் தற்போது அவர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தற்போது குடியிருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு இப்போதைக்கு எந்த வித ஆபத்தும் இருக்காது என்று கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments