Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாளி பெண்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாளி பெண்
, செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (22:53 IST)
அமெரிக்க நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஜோ பைடன் போட்டியிட்டார்.
 

இதில், ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்கிறார்.

இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் அடுத்தாண்டு (2024) அதிபர் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்  மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
 

ALSO READ: ''மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்''- அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
 
அதேபோல், தற்போதைய அதிபர் ஜோ பைடனும் இத்தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக  அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில்,  முன்னாள் மாகாண கவர்னர் நிக்கி ஹாலே  போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.

 இன்று இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த தேர்தலில் மக்களின் ஆதவில், பொருளாதாரத்தை மீடெடுக்க வேண்டும்,  எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், நாட்டை வலுப்படுத்த புதிய தலைமுறை தலைமையேற்க வேண்டிய நேரமிது என்று தெரிவித்தார்.

ஏற்கனவே, குடியரசு கட்சி சார்பில், டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள  நிலையில் உட்கட்சியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவெ, இந்திய வம்சாவளியைச் சேந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிபிசி அலுவலகத்தில் சோதனை: பிரெஸ் கிளப் ஆஃப் இந்தியா கண்டனம்