Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துருக்கி நிலநடுக்கம்; 30 ஆண்டுகளுக்கு பின் பகை மறந்து எல்லையை திறந்த அர்மீனியா!

Armenia
, ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (15:35 IST)
துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் அர்மீனியா 30 ஆண்டுகள் கழித்து எல்லையை திறந்து உதவ முன்வந்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியா நாட்டு எல்லை நகரங்களில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் பல இடிந்து விழுந்ததுடன் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்பதற்காக துருக்கி, சிரியா மீட்பு படைகளுடன் பல வெளிநாட்டு மீட்பு குழுவினரும் களம் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் துருக்கியின் அண்டை நாடான அர்மீனியாவும் துருக்கி மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது. துருக்கி – அர்மீனியா இடையே 100 ஆண்டுகாலமாக பகை நிலவி வருகிறது. துருக்கியில் ஒட்டமான் ராஜ்ஜியம் நடந்து வந்த சமயத்தில் 15 லட்சம் அர்மீனியர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 1993ல் துருக்கி அஜர்பைஜான் பழங்குடி மக்களுக்கும், அர்மீனியர்களுக்கும் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு பிறகு இருநாட்டு எல்லைகளும் நிரந்தரமாக மூடப்பட்டிருந்தது.

தற்போது துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ள நிலையில் பகையை மறந்து அர்மீனியா 100 டன் உணவு, மருந்து மற்றும் குடிநீர் ஆகியவற்றை எல்லையை திறந்து ஆலிகேன் வழியே அனுப்பி வைத்துள்ளனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால்.. மிரட்டல் வருகிறது: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு