விரைவில் நாடு திரும்பி உத்தேசிப்பதாகவும், ஆப்கானிஸ்தான் மக்களுடன் பேசவிருப்பதாகவும் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட அனைத்து நகரங்களையும் தலிபான் படைகள் கைப்பற்றிய நிலையில் அவசர அவசரமாக ஆப்கானிஸ்தான் அதிபர் அப்துல் கனி நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் அவர் தன்னுடன் கோடிக்கணக்கான பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தனது முகநூலில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியே வரும்போது பணம் எதுவும் எடுத்துக் கொண்டு வரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் அபுதாபியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஐக்கிய அரபு அமீரகம் உறுதி செய்துள்ளது.
மேலும், ரத்தக்களறியை தடுக்கவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினேன். பொருட்கள், பணத்தை எடுத்து சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. விரைவில் நாடு திரும்பி உத்தேசிப்பதாகவும், ஆப்கானிஸ்தான் மக்களுடன் பேசவிருப்பதாகவும் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.