மத்திய அமெரிக்க நாடான பெலீஸ் என்ற நாட்டில் சுற்றுலா செல்லும் சிறிய ரக விமானத்தில் 14 பயணிகள் மற்றும் இரண்டு விமானிகள் பயணம் செய்தனர். அப்போது நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென பயணிகளில் ஒருவர் கத்தியை காட்டி விமானத்தை கடத்த முயன்றார்.
தன்னை இந்த நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்று விடுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இதனால் விமானத்தில் இருந்தவர்கள் மத்தியில் பதட்டம் விலகியது. இந்த நிலையில், விமானத்தை கடத்த முயன்ற பயணி அருகில் இருந்த பயணி ஒருவர் திடீரென தனது துப்பாக்கி எடுத்து சுட்டார். இதனை அடுத்து, அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தால் இரண்டு மணி நேரம் விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், போலீசார்க்கு தகவலை அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், விமானத்தை கடத்தியநபர் அமெரிக்காவை சேர்ந்த சாவா டெய்லர் என்பதும், இந்த கடத்தல் சம்பவத்தில் அவர், விமானி உள்பட 3 பேரை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரியவந்தது.
அதன் பிறகு, சுற்றுலா பயணி தன்னிடம் இருந்த லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால் தான் அந்த நபரை சுட்டுக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அடுத்து, அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.