Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளியில் மர்ம சுழலும் பொருள் கண்டுபிடிப்பு! – பீதியில் விஞ்ஞானிகள்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (09:05 IST)
விண்வெளியில் மர்மமான சுழலும் பொருள் ஒன்றை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

விண்வெளியில் ஏராளமான நட்சத்திரங்கள், கோள்கள், எரிகற்கள் சுற்றி வரும் நிலையில் அவை குறித்து பல நாட்டு விஞ்ஞானிகளும் தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள முர்ச்சிகள் வைட்பீல்ட் ஆரோ என்ற பகுதியில் ஆஸ்திரேலிய வானியல் ஆராய்ச்சி மாணவி ஒருவர் தொலைநோக்கி கொண்டு வானியல் ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது பால்வழி மண்டலத்தில் மர்மமான முறையில் சுழலும் பொருள் ஒன்றை அவர் கண்டறிந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அந்த மாணவி, சில மணி நேரங்களில் அந்த சுழலும் பொருள் தோன்றி மறைந்து கொண்டிருந்ததாகவும், விண்வெளியில் எதுவொன்றும் அவ்வாறு செய்யாது என்பதால் அது பயத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். தோன்றி மறையும் மர்ம பொருள் குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆய்வுகளை செய்து வருகின்றனர். இந்த பொருள் பூமியிலிருந்து 4 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments