வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு மாணவர் தலைமையிலான கிளர்ச்சியின் போது, "மனித குலத்திற்கு எதிராக குற்றங்களைச் செய்ய உத்தரவிட்டதற்காக" அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
ஷேக் ஹசீனா "தூண்டுதல், கொலை செய்ய உத்தரவிட்டது மற்றும் அட்டூழியங்களை தடுக்க தவறியது" உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக காணப்பட்டார்.
போராட்டக்காரர்களை "ஒழித்துக்கட்ட" அவர் உத்தரவிட்டதாகவும், மாணவர்களை கொல்ல ஆளில்லா விமானங்கள் மற்றும் கொடிய ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டார் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
பிரதமர் பதவியை இழந்த ஷேக் ஹசீனா, கடந்த ஓராண்டாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை நாடு கடத்த வங்கதேச இடைக்கால அரசு கோரியுள்ளது.
இந்த தீர்ப்பை ஒட்டி, வங்கதேசம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கலவரத்தில் ஈடுபடுபவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.