Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேச எதிர்க்கட்சி கோரிக்கை..!

Siva
புதன், 21 ஆகஸ்ட் 2024 (16:12 IST)
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில் அவரை நாடு கடத்துங்கள் என வங்கதேச முக்கிய எதிர்க்கட்சி இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தில் மாணவர்கள் இட ஒதுக்கீடு போராட்டம் நடந்த நிலையில் அது வன்முறையாக மாறியதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

அவர் மீது கொலை வழக்கு உள்பட சில வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷேக்  ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சி பிஎன்பி இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஷேக் ஹசீனாவை வங்கதேச அரசிடம் சட்டபூர்வமாக இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள இருப்பதால் இந்தியா அதற்கு உதவ வேண்டும் என்றும் பிஎன்பி கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
வங்கதேசத்தின் சுதந்திரத்தை பலவீனப்படுத்தியது, கடந்த 15 ஆண்டுகளாக நாட்டின் முன்னேற்றத்தை தடுத்தது, அவருடைய தவறான அரசியலால் கடன் சுமை அதிகமானது ஆகியவை அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்றும் இதற்கு அவர் மக்கள் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்குதலா? படுகாயத்தால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

அடுத்த கட்டுரையில்
Show comments