கனடாவில் விமானத்தில் தூங்கிய பெண்மனி, பயணம் முடிந்த பின்னும் எழுந்திருக்காததால் கடும் அவதிக்கு உள்ளானார்.
டிஃபானி ஆடம்ஸ் என்ற பெண்மனி கடந்த ஜூன் 9 ஆம் தேதி, கனடாவின் க்யூபெக் பகுதியிலிருந்து டொரண்டோவுக்கு, ஏர் கனடா விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
1.50 மணிநேர பயணத்தில் பாதியிலேயே உறங்கிவிட்டார். விமானம் தரையிறங்கிய பிறகு, தூங்கிய டிஃபானியை யாரும் கவனிக்கவில்லை.
விமான சேவையில் இருந்தவர்கள் டிஃபானியை உள்ளேயே வைத்து பூட்டிவிட்டு, விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.
சில மணி நேரம் கழித்து எழுந்த டிஃபானி, சுற்றி எங்கிலும் இருட்டாக இருப்பதை பார்த்து அதிர்ந்து போய், தனது மொபைல் ஃபோனிலுள்ள டார்ச் லைட்டை இயக்கி, விமானத்தின் மெயின் கதவிற்கு முன் வந்து கதவை திறந்துள்ளார்.
பின்பு வாசலில் நின்றுகொண்டு, சரக்கு வாகன ஓட்டி ஒருவரிடம் சிக்னல் காட்டி, அந்த ஓட்டுனரின் உதவியுடன் விமானத்திலிருந்து இறங்கியுள்ளார்.
இச்சம்பவத்தை குறித்து அவர் ஏர்-கனடாவின் வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இனிமேல் இது போன்ற கவனக்குறைவு நடக்காமல் பார்த்துகொள்வோம் என ஏர் கனடா நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.