பாகிஸ்தான் நாட்டில் உள்ள பெஷாவர் நகரில் உள்ள ஓட்டல் அருகில் குண்வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நாட்டில் அடிக்கடி குண்டுவெடிப்பு, வன்முறை, சம்பவம் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை ரேஞ்சர் படையினர் கைது செய்ததை அடுத்து, அவரது கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெஷாவர் நகரின் ரிங் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் இன்று குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில், 200 கிராம் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.