அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆற்றில் இன்று அந்நாட்டின் போயிங் விமானம் ஒன்று இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அமெரிக்காவின் போயிங் விமானம் 737 என்ற வகை விமானம் இன்று காலை 136 பயணிகளுடன் விண்ணில் பறந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானிகள் விமானத்தை தரையில் இறக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த பகுதியில் ரன்வே ஏதும் இல்லாததால் வேறு வழியின்றி விமானம் புளோரிடா ஆற்றில் இறக்கப்பட்டது.
விமானம் ஆற்றில் இறங்கினாலும் அதில் பயணம் செய்த 136 பயணிகள் உள்பட யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் பயணிகள் படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டனர். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளும், காவல்துறையினர்களும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.