வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் இதுதான் நேரம் டெலிட் ஃபேஸ்புக் என்ற டுவீட் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் பயனாளிகளின் விவரங்களை அவர்களுக்கே தெரியாமல் திருடி வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. சிலர் இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் புகார் மனு அளித்துள்ளனர்.
வாட்ஸ்அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு வாட்ஸ்அப்பில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. பயனாளிகளை கவர பல புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியில் மேம்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் டுவீட் செய்துள்ளார். அதாவது, இதுதான் நேரம் டெலிட் ஃபேஸ்புக் என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த டுவீட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் தரவு பகுப்பாய்வு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளிகளின் கணக்கை அவர்கள் அனுமதி இல்லாமல் அணுகியுள்ளது.
இதன் காரணமாக தான் பிரையன் ஆக்டன் இப்படி ஒரு டுவீட் செய்துள்ளார்.