சீன நிறுவனத்துக்கு சொந்தமான கொரோனா தடுப்பூசி பரிசோதனையால் பக்கவிளைவுகள் மோசமாக இருந்ததால் அதை நிறுத்தியுள்ளது பிரேசில் நாடு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் சில மருந்துகள் ஆரம்ப கட்டங்களை தாண்டி இப்போது மனித பரிசோதனை கட்டத்தை எட்டியுள்ளன. அதில் ஒன்றாக பிரேசில் நாட்டில் சீனாவைச் சேர்ந்த சினோவாக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வுகள் நடத்தப்பட்டன.
அந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட தன்னார்வலர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதையடுத்து, அந்த தடுப்பூசியை நிறுத்த சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அந்த பக்க விளைவுகள் குறித்து முழு விவரத்தையும் அளிக்க மறுத்துள்ளது.