ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 க்கு உயர்த்தி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில காலமாக தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பால் பாக்கெட் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினின் பால் பாக்கெட்டுகள் தனியார் நிறுவனங்களை விட லிட்டருக்கு ரூ.22 வரை குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பால் கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வேண்டும், அனைத்து கால்நடைகளுக்கும் அரசு இலவச காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதில், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ல் இருந்து ரூ.47 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.