கடந்த சில நாட்களுக்கு முன்னர் தைவானை சுற்றி சீனா போர் பயிற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனா தற்போது போர் பயிற்சி செய்து வருவது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி என்பவர் கடந்த 2ஆம் தேதி தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் போர் பதட்டம் உச்சத்தை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தைவானை சுற்றி உள்ள கடல் மற்றும் வான் வெளியில் போர் பயிற்சியை மீண்டும் தொடங்கி உள்ளது என்றும் அமெரிக்கா மற்றும் தைவானுக்கு எதிரான ஒரு கடுமையான நடவடிக்கை இது என்றும் சீன ராணுவம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.