அமெரிக்காவுடன் தொடர்ந்து வர்த்தக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மோதி வரும் சீனா உலக நாடுகள் பலவற்றில் உளவாளிகளை வைத்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் நடவடிக்கைகள் உலகளாவிய அரசியலில் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. தன்னிச்சையாக முடிவெடுத்தல், எல்லை நாடுகளுடன் பிரச்சினை என நாளுக்கு நாள் சீனா பிற நாடுகளுக்கு தலைவலி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங் விசுவாசிகளான சீன கம்யூனிஸ்டுகள் சுமார் 20 லட்சம் பேர் உலகம் முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் இருப்பதாக ஆஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சில மாதங்கள் முன்னரே மெயில் ஆன் சண்டே, ஸ்வீடிஷ் எடிட்டர் போன்ற பிற நாட்டு செய்தித்தாள்களும் செய்திகள் வெளியிட்டுள்ளன. இப்படியாக பல நிறுவனங்களில் தனது ஆட்களை வைத்து உலக பொருளாதாரத்தை சீனா கட்டுப்படுத்த முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து பொருளாதார ரீதியாகவும், கொரோனா வைரஸ் மற்றும் எல்லை அரசியல் ரீதியாகவும் அமெரிக்கா – சீனா இடையே மோதல் உள்ள நிலையில் இந்த செய்திகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.