கடந்த சில மாதங்களாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கு வர்த்தகபோர் உச்சத்தை தொட்டு வருகிறது. சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவும், அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும் வரியை அதிகரித்தப்படியே உள்ளன.
இந்நிலையில் அமெரிக்கா செல்லும் சீன சுற்றுலா பயணிகளிடம் “அமெரிக்காவில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் எல்லாம் சாதாரணமாக நடைபெறுகின்றன. எனவே பயணம் செல்லும் மக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தி கொண்டு செல்லுங்கள்” என சீனா எச்சரித்துள்ளது.
அதற்கேற்ப அமெரிக்காவும் சீனாவிலிருந்து அமெரிக்கா சென்று படிக்க விண்ணப்பித்திருந்த மாணவர்களின் கல்வி விசாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது எனவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. இவர்களின் இந்த தொடர்ந்த பொருளாதார போரால் இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ என உலக நாடுகள் கவலையில் உள்ளன.