Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சைக்குரிய பகுதியில் அதிநவீன தியேட்டர்: சீனாவின் நடவடிக்கையால் வியட்நாம் அதிருப்தி

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (06:13 IST)
சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லைப்பிரச்சனை குறித்து மோதல் போக்குடன் நடந்து கொண்டு வருகிறது. இந்தியாவில் சிக்கிம் எல்லையில் சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வரும் நிலையில் வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடிவரும் தென் சீனக் கடல் பகுதியில் திடீரென சினிமா தியேட்டர் ஒன்றை சீனா திறந்துள்ளது. இதனால் வியட்நாம், தைவான் நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன. 



 
 
தென்சீனக்கடல் பகுதியில் விமானப்படை தளம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு என்று சீனா ஏற்கனவே அடாவடி செய்து வருகிறது. தென் சீனக்கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் ஏதுமில்லை என நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் அளித்த போதிலும், அந்த தீர்ப்புக்கு கட்டுப்படாமல் சீனாவின் நடவடிக்கை இருந்து வருகிறது.
 
இந்த நிலையில்  தென் சீனக் கடல் பகுதியில் சில ஆயிரம் மக்கள்கூட வசிக்காத ஒரு தீவில் சீன அரசு சமீபத்தில் சினிமா தியேட்டர் ஒன்றை திறந்துள்ளது.  சாந்தா என்லாங் சினிமா என பெயரிடப்பட்டுள்ள இந்த தியேட்டரில் அதிநவீன டிஜிட்டல் ஒலி அமைப்புடன், 3-டி திரையில் 4-டி புரொஜெக்டர்கள் மூலம் படம் காட்டப்படுகிறது. இந்த தியேட்டருக்கு உள்ளூர்வாசிகள் பெரும் ஆதரவு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments