Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்மியெடுக்கும் குளிர்; சீன வீரர்கள் தவிப்பு! – திபெத் இளைஞர்களை களமிறக்க முடிவு!

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (12:05 IST)
இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட மோதலால் சீனா லடாக் எல்லையில் வீரர்களை குவித்துள்ள நிலையில் குளிரை சமாளிக்க முடியாமல் சீன வீரர்கள் தவித்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் லடாக் எல்லையில் சீன – இந்திய படைகள் இடையே எழுந்த மோதலை தொடர்ந்து லடாக் எல்லைப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் வீரர்களை அதிகப்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து லடாக்கில் பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் இதை விடவும் குளிரான சியாச்சென் மலை உச்சி உள்ளிட்ட குளிர் பகுதிகளில் இருந்து பழக்கப்பட்டவர்கள் என்பதால் குளிரை சமாளித்து வருகின்றனர்.

ஆனால் ஏகப்பட்ட சீன வீரர்களால் கிழக்கு லடாக்கின் குளிரையும், பனியையும் தாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் பலர் இறக்க தொடங்கியுள்ளதால் சீனா அதிர்ச்சியைடைந்துள்ளது. இதனால் சீன வீரர்களுக்கு பதிலாக குளிரில் வாழ பழக்கமான திபெத்திய இளைஞர்களை தங்கள் படையில் சேர்க்க சீனா முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம் அந்த இளைஞர்கள் தலாய்லாமா ஆதரவாளர்களாக இருக்க கூடாது என்றும், இளைஞர்களின் பெற்றோர் சீன கம்யூனிச ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments