Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இலங்கை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சீன உளவுக் கப்பல்!

Chinese ship
, திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (22:40 IST)
சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பல் கடந்த 16 ம் தேதியன்று இலங்கை அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு வந்தது.

இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் முதலில் கடலிலேயே இலங்கை அக்கப்பலை நிறுத்தி வைத்தது. பின்னர் சோதனைகளுக்கு பிறகு அம்பந்தொட்டை துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது.

சீன உளவு கப்பல் ஒருவார காலம் அம்பந்தொட்டை துறைமுகத்தில் 22 ஆம் தேதி வரை நிற்பதால்  தென் இந்திய பகுதிகளில் உள்ள ராணுவ நிலையங்கள், அணுமின் நிலையங்களையும் அது கண்காணிக்கும் அபாயம் உள்ளதாக இந்தியா

இதனால் தென்னிந்திய வங்க கடல் பகுதிகளான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளை இந்திய கடற்படையின் கப்பல்கள் சுற்றி வந்துக் கொண்டுள்ளன. இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் க்ராப்ட் கப்ப உள்பட 8 கப்பல்கள், 2 விமானங்கள், 3 ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் எரிபொருள் உணவு பொருட்கள் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்தத்தைத் தொடர்ந்து பூர்த்தி செய்ததை அடுத்து, சீனா உளவுக் கப்பல் யுவான் சுவாங் 5 கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தென்னிந்தியாவில் உள்ள கடற்படை தளங்களை வேவு பார்க்கக் கூடாது என  என சீனாவுக்கு நிபந்தனை விதித்தாகவும் கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்ட ஊழல்; சஞ்சய் ராவத்திற்கு காவல் நீட்டிப்பு