சீனாவில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா அதிகமாக பரவும் பகுதிகளில் முழுமுடக்கத்தை அறிவித்த சீன அரசு, மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் எச்சரித்தது.
ஆனால் இந்த கொரோனா பொதுமுடக்க நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடந்த நிலையில் மக்கள் பலர் கொரோனா முகாம்களுக்கு தீ வைத்தனர். இதனால் போலீஸார், மக்களிடையே கைகலப்பு ஏற்பட்டு வன்முறை உண்டானது.
தொடர்ந்து போராட்டம், வன்முறை சம்பவங்கள் காரணமாக குவாங்ஷோ நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற நகரங்களிலும் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.