கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பூங்காக்கள், திரையரங்குகள் மற்றும் மதுக்கடைகளை மூட சீன அரசு உத்தரவிட்டு இருப்பதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது என்பதும் இதன் காரணமாக சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சீனாவில் உள்ள மக்காவ் என்ற நகரில் மதுக்கடைகள் திரை அரங்குகள் பூங்காக்கள் ஆகியவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
எனவே அந்த நகரத்தில் வாழும் 6 லட்சம் மக்கள் தற்போது மிகப்பெரிய சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது