வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளதை அடுத்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழக கடற்கரையோரம் நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக வழக்கு தமிழக கடலோர பகுதிகளில் இன்று மாலை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திர மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி வர உள்ளதை அடுத்து சென்னை எண்ணூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
ஏற்கனவே நாகப்பட்டினம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.