சிக்கன நடவடிக்கை காரணமாக 18000 பேரை பணி நீக்கம் செய்ய காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது மெர்சிடஸ்-பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் டைம்லர் என்ற நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலகம் முழுவதும் ஜெர்மனியின் டைம்லர் நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிந்து வரும் நிலையில் வரும் 2022ம் ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது
ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மூலம் ஆகும் செலவில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயை குறைக்கவும், எதிர்காலத்துக்கு நவீன கார்களை உருவாக்க முதலீடு செய்யவும் ஊழியர்களை குறைக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது
இதனையடுத்து முன்கூட்டியே ஓய்வு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விரைவில் இந்நிறுவனம் அறிவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது