Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தான நாடு பாகிஸ்தான்: அமெரிக்க உளவுப்படை அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (12:14 IST)
பாகிஸ்தான் தலைநகராக இருக்கும் இஸ்லாமாபாத்தில், அமெரிக்க உளவுப்படையின் (சி.ஐ.ஏ.) நிலைய அதிகாரியாக பணியாற்றியவர்  கெவின் ஹல்பெர்ட். இவர் அமெரிக்காவில் இயங்கி வருகிற உளவுப்படையினருக்கான ‘சைபர் பிரீப்’ என்ற இணையதளத்தில் பாகிஸ்தானைப் பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் உலகிலேயே ஆபத்தான நாடு, பாகிஸ்தான் என்று அமெரிக்க உளவுப்படையின் முன்னாள் உயர் அதிகாரி கூறி உள்ளார்.

 
அதில் உலகத்துக்கே பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடாக இருக்கக்கூடும். பாகிஸ்தான் தோல்வியை சந்திக்கப்போகிற  மிகப்பெரிய ஒரு வங்கியைப் போன்றதாகும் அல்லது மிகப்பெரிய தோல்வியை அனுமதிக்கும் மிகப்பெரிய வங்கியைப்  போன்றதாகும்.
 
பாகிஸ்தானில் 18 கோடியே 20 லட்சம் மக்கள் உள்ளனர். சரிவை சந்தித்து வரும் பொருளாதாரம், பரவலான பயங்கரவாதம்,  அதிவேகமாக வளர்ந்து வரும் அணு ஆயுதம், உலகின் 6-வது பெரிய மக்கள் தொகை, இந்த வகையில் எல்லாம் பார்க்கிறபோது  பாகிஸ்தான் பெரும் கவலையை அளிக்கிற நாடாக விளங்குகிறது.
 
பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும், சர்வதேச நிதியமும் (ஐ.எம்.எப்.) கோடிக்கணக்கான டாலர்கள் நிதி உதவி செய்கின்றன. ஆனால்  நல்ல நடத்தையை நோக்கி வழிநடத்தி வெற்றி பெற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
 
மேலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 16 ‘ஜே.எப்-17 தண்டர்’ போர் விமானங்களை பாகிஸ்தானும், சீனாவும் கூட்டாக உருவாக்கி இருப்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயமாக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments