லிபியாவில் சாலையில் ஓடிய டீசலை மக்கள் அள்ள சென்றபோது 70க்கும் மேற்பட்டோர் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிபியா நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பெண்ட் பய்யா என்ற நகரில் டீசல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி சென்றுள்ளது. அப்போது திடீரென தடம்புரண்ட லாரி சாலையிலேயே கவிழ்ந்துள்ளது.
அதனால் லாரியில் இருந்த டீசல் சிதறி சாலையில் ஆறாக ஓடியுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் பயணித்த சிலர் தண்ணீர் பாட்டில், வாளி என கையில் கிடைத்தவற்றை கொண்டு வந்து டீசலை அள்ளியுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட தீ சாலையில் இருந்த டீசலில் பிடிக்க டீசலை சேகரித்துக் கொண்டிருந்த 70க்கும் மேற்பட்டோர் மீது தீ பற்றியது. இதனால் பலரும் அலறி துடித்து ஓடியுள்ளனர்.
6 பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.