அர்ஜெண்டினா கால்பந்து வீரர் டிடாகோ மரடோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்காததே அவர் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் டியாகோ மரடோனா. அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவனான இவரை கடவுளின் கை என்றே பலரும் அழைப்பதுண்டு. உலக அளவில் கொண்டாடப்பட்ட கால்பந்து வீரரான டியாகோ மரடோனா கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
அதற்கு முன்னதாக நவம்பர் 3ம் தேதி அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவருக்கு சரியான மருத்துவ வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் இறக்கும் முன்னர் 12 மணி நேரமாக மரடோனா மரணத்துடன் போராடியுள்ளதாகவும், அப்போது சரியான மருத்துவத்தை வழங்கியிருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்றும் 20 மருத்துவர்கள் மருத்துவ அறிக்கை சமர்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.