Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பச்சை குத்துனா பீட்சா இலவசம்: குவிந்த மக்கள் - கடுப்பான பீட்சா நிறுவனம்

Advertiesment
டாமினோஸ்
, செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (13:50 IST)
தங்களது கம்பெனி லோகோவை பச்சை குத்திக் கொண்டால் பீட்சா இலவசம் என டாமினோஸ் நிறுவனம் விளம்பரப்படுத்தியது அவர்களுக்கே பிரச்சனையாய் முடிந்துள்ளது.
 
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகவும் பிடித்த உணவாக பீட்சா மாறிவிட்டது. சோறு இல்லைன்னாலும் பரவாயில்லை பீட்சா வேண்டும் என பல குழந்தைகள் பெற்றோரை நச்சரிப்பதை நாம் பார்க்கிறோம்.
 
இதனால் பல பீட்சா நிறுவனங்கள் மக்களை கவர பல்வேறு ஆஃபர்களை கொடுத்து வருகின்றனர்.
டாமினோஸ்
அந்த வகையில் ரஷ்யாவில் உள்ள இரு இடத்தில் டாமினோஸ் பீட்சா நிறுவனம் புதிய கிளை ஒன்றை துவங்கியது. புது கடை என்பதால் வாடிக்கையாளர்களை கவர நிறுவனம் ஒரு வித்தியாசமான டெஸ்டை வைத்தது. தங்களது கம்பெனி லோகோவை உடலில் நிரந்தரமாக பச்சை குத்திக் கொண்டால் இலவச பீட்சா அளிக்கப்படும். ஒரு வருடத்திற்கு 100 பீஸா என்று 100 வருடத்திற்கு பீட்சா அளிக்கப்படும் என்று போட்டி வைத்தது. ஆஃபர் 2 மாதங்கள் நடைபெற இருந்தது.
டாமினோஸ்
இதனைக்கேட்டு நூற்றுக்கணக்கான மக்கள் டாமினோஸை நோக்கி படையெடுத்தனர். இவ்வளவு பேர் வருவார்கள் என்று டாமினோஸ் நிறுவனமே நினைக்கவில்லை.
டாமினோஸ்

இதனால் டாமினோஸ் நிறுவனம் இரண்டு மாதம் நடத்த வேண்டிய இந்த போட்டியை 4 நாட்களில் நிறுத்தியது. இறுதியாக 400 பேர் இந்த இலவச பீட்சா சலுகைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறாரகள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பா...நல்லா இருக்கியா? : அடி வாங்கிய ஆட்டோ டிரைவரை நலம் விசாரித்த தமிழிசை